அறுவடை செய்த நெல்மணிகளை ரோட்டில் காய வைக்கும் பணி கும்பகோணத்தில் தமிழ்பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையம் திறப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-சென்னை மெயின்ரோடு எஸ்எம்ஏஆர் பிளாசாவில் தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ் பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையம் திறக்கப்பட்டது. இந்த புதிய விநியோக மையத்தை WINWAY WATER Proprietor, எல்.சந்திரபிரபு திறந்து வைத்தார். தமிழ்பால் நிறுவனத்தின் செயல் இயக்குன் கே.தியாகராஜன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். துபாய் ரெஸ்டாரெண்ட் நிர்வாக இயக்குனர் எம்.கே.ஷேக் அலாவுதீன் முதல் விற்பனையை தொடங்கி வைததார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்பால் நிறுவனத்தின் விற்பனை அதிகாரிகள் பங்கேற்றனர் விழாவில் விநியோக மையமான சுயம்பு ஏஜென்சியின் விநியோகஸ்தர்களான ஆர்.பார்த்திபன், பி.தீபன் ஆகியோர் வரவேற்றனர். இதில் தமிழ் பால் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைமை அதிகாரி சிவக்குமார் பேசுகையில் 80க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் 10 மாவட்டங்களில் விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி என அனைத்து பகுதிகளுக்கும் நேரடி விற்பனை மையத்தை கொண்டு வருவதே தமிழ்பால் நிறுவனத்தின் நோக்கம். ஒவ்வொரு ஊர்களுக்கும் இது மாதிரியான விநியோக மையத்தை அமைத்து கொண்டிருக்கிறோம். ஆர்வமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொண்டு அவர்களும் வாழ்வில் வளர்ச்சி பெறலாம் என்றார்.

The post அறுவடை செய்த நெல்மணிகளை ரோட்டில் காய வைக்கும் பணி கும்பகோணத்தில் தமிழ்பால் நிறுவனத்தின் புதிய விநியோக மையம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: