தகாத உறவால் பிறந்த குழந்தையை விற்க முயற்சி

 

விழுப்புரம், ஜூன் 5: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ஜெயா(28). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே ஜெயாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தகாத உறவால் பிறந்த குழந்தையை வளர்க்க முடியாத ஜெயா குழந்தையை விற்பனை செய்வதற்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அக்கம், பக்கத்தில் குழந்தை விற்பனை செய்வதற்காக பேசிக் கொண்டிருந்தபோது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தகாத உறவால் பிறந்த குழந்தையை விற்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: