முக்கண்ணாமலைப்பட்டியில் கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி வகுப்பு

விராலிமலை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பில் நடைபெற்று வந்த கோடை கால நல்லொழுக்க பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. முக்கண்ணாமலைப்பட்டி தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில், கோடைகால நல்லொழுக்க பயிற்சி வகுப்பு கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் மனநலம், கல்வி கற்கும் முறை,தாய், தந்தையை மதித்து நடப்பது, ஜாதி, மதம் பாராமல் மற்ற மனிதனிடத்தில் மனிதாபிமான முறையில் நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு நல்லொழுக்க பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு கிளை தலைவர் ஜக்கரிய்யா தலைமை வகித்தார், கிளை நிர்வாகிகள் நிஜாமுதீன், மைதீன், சபியுல்லா முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற மாவட்ட பேச்சாளர் அப்துல் பாரி கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரபீக் ராஜா, மாவட்ட தொண்டரணி செயலாளர் காஜா மொய்தீன் ஆகியோர் கோடைகால நல்லொழுக்க பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். கிளை நிர்வாகி சபியுல்லா நன்றி நன்றி கூறினார். இதில் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post முக்கண்ணாமலைப்பட்டியில் கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: