ரூ.4.50 லட்சம் ஏமாற்றியவர் மீது வழக்கு

 

விருதுநகர், ஜூன் 5: விருதுநகர் ஆனைக்குட்டத்தை சேர்ந்தவர் குருசாமி, இவர் தனது மகளின் திருமணத்திற்காக தனக்கு சொந்தமான 120 ஆடுகளை சிவகாசி நெடுங்குளத்தை சேர்ந்த ராமர் என்பவருக்கு ரூ.5.60 லட்சத்திற்கு விற்றுள்ளார். முதல் தவணையாக ரூ.80 ஆயிரம், 2வது தவணை ரூ.30 ஆயிரம் மட்டும் வழங்கி விட்டு, மீதிப்பணம் ரூ.4.50 லட்சத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். ஆமத்தூர் போலீசில் குருசாமி புகாரில் 120 ஆடுகளை வாங்கி ரூ.4.50 லட்சம் தராமல் ஏமாற்றி வரும் ராமர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ரூ.4.50 லட்சம் ஏமாற்றியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: