பள்ளி பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

 

விருதுநகர், ஜூன் 5: கோடை விடுமுறை முடிந்து நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனையொட்டி பள்ளி செல்ல தேவையானவற்றை வாங்கவிருதுநகர் கடைத்தெருவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர். 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.வெயிலின் தாக்கம் அதகரித்ததை தொடர்ந்து குழந்தைகள் நலன் கருதி7 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.பள்ளி திறக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளதாலும்,தொழிலாளர்களுக்கு நேற்று விடுமுறை தினம் என்பதாலும் மாணவ மாணவியர் பள்ளி செல்ல தேவையான பொருட்களை வாங்க விருதுநகர் கடைத்தெருவில் குவிந்தனர்.

தங்கள் குழந்தைகளுக்கு தேவையான சீருடைகள், புத்தகப்பை மற்றும் வாட்டர் பாட்டில், எழுதுகோல் உள்ளிட்ட உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கிய பெற்றோர்கள் குழந்தைகள் கையில் கொடுத்தனர். புதிய பொருட்களை குழந்தைகள் ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர். ஒரே நாளில் ஒரு நேரத்தில் குவிந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

The post பள்ளி பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: