செங்கோட்டை அருகே இலத்தூரில் வீட்டு செப்டிங் டேங்கில் மனித எலும்புக்கூடு மீட்பு போலீஸ் விசாரணை

செங்கோட்டை: செங்கோட்டை அருகே இலத்தூரில் ரேஷன் கடை தெரு தேவர் திருமண மண்டபம் அருகேயுள்ள லட்சுமணன் என்பவரது வீட்டில் புதிதாக கழிவறை கட்டுவதற்காக ஏற்கனவே உள்ள செப்டிங் டேங்க்கை நேற்று சுத்தம் செய்தனர். அப்போது அதில் மனித எலும்புக்கூடு கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வீட்டின் உரிமையாளரிடம் கூறினர். தகவலறிந்து விரைந்து வந்த இலத்தூர் போலீசார், மனித எலும்புக் கூட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post செங்கோட்டை அருகே இலத்தூரில் வீட்டு செப்டிங் டேங்கில் மனித எலும்புக்கூடு மீட்பு போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: