குளத்தூர் அருகே புதிய அணைக்கட்டு பணி மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

குளத்தூர், ஜூன் 3:குளத்தூர் அருகே ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளூர் ஊராட்சி முத்துக்குமாரபுரம் கிராமத்தில் நபார்டு வங்கி நிதியின் திட்டத்தின் கீழ் ரூ425.11லட்சம் மதிப்பீட்டில் 38.90 மீட்டருக்கு புதிய அணைக்கட்டு கட்டுவதற்கான பணி துவக்க விழா நடந்தது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், ராமராஜ், செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் சுபாஷ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய சேர்மன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப்பெருந்தலைவரும், ஒன்றிய செயலாளருமான காசிவிஸ்வநாதன், உதவி பொறியாளர் விக்னேஷ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், முள்ளூர் ஊராட்சி மன்றதலைவர் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜ், ஊராட்சி மன்றதலைவர்கள் கவுரி, சண்முகையா, சந்தனராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் கருணாகரன், சென்றாயப்பெருமாள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கதலைவர் ஆனந்த், கிளைசெயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம், சின்னத்தம்பி, லட்சுமணன், கொடியங்குளம் ஊராட்சி மன்றதலைவர் அருண்குமார் மற்றம் காண்ட்ராக்டர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post குளத்தூர் அருகே புதிய அணைக்கட்டு பணி மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: