தூத்துக்குடி 20வது வார்டில் சாலை பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி, ஜூன் 3:தூத்துக்குடி மாநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி, புதிய கால்வாய் அமைக்கும்பணி, தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாத பகுதிகளில் புதிதாக கால்வாய் கட்டும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. தார்சாலை அமைக்காத பகுதிகளுக்குகெல்லாம் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மேயர் ஜெகன் பெரியசாமி வெற்றிபெற்ற 20வது வார்டு பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான பணிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, 20வது வார்டு பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டு வருவதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்து ஒப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் தார்சாலை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு முழுமையாக பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வட்ட செயலாளர் ரவீந்திரன், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி 20வது வார்டில் சாலை பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: