மீண்டும் விமானங்களை இயக்க கோ பர்ஸ்ட் தயார்

மும்பை: கோ பர்ஸ்ட் நிறுவனம் நிதிநெருக்கடி காரணமாக கடந்த மே 3ம் தேதி முதல் விமான இயக்கத்தை நிறுத்தி விட்டது. இதனால் எழுந்த புகாரை தொடர்ந்து முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணத்தை திரும்ப வழங்க விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மீண்டும் விமானங்களை இயக்க தயாராக இருப்பதாக கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது. முதற்கட்டமாக 26 விமானங்களை தினமும் 152 முறை இயக்கப்போவதாகவும், 4700 ஊழியர்களை கொண்டு பணிகளை துவங்கப்போவதாகவும் தெரிவித்து உள்ளது.

The post மீண்டும் விமானங்களை இயக்க கோ பர்ஸ்ட் தயார் appeared first on Dinakaran.

Related Stories: