2023ம் ஆண்டுக்கான தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 11 பேர் இறுதிசுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். புளோரிடாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 வயது சிறுவன் தேவ்ஷா வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். முதலிடம் பெற்ற தேவ்ஷாவுக்கு வெற்றி கோப்பையுடன் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 38 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
The post வாழ்த்துக்கள் தேவ்: அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியில் வெற்றி வாகை சூடினார் இந்திய வம்சாவளி சிறுவன்..!! appeared first on Dinakaran.