கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் பிரதோஷம்

கந்தர்வகோட்டை, ஜூன் 2: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் அமைந்து உள்ள தாமரை ஊரணிக்கு வடபுறமும், நஞ்சை நிலபரப்பின் தென்புறமும் அமைந்து உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் ஆலத்தில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு பிரதோச தினதை முன்னிட்டு ஈஸ்வரருக்கு 18 வகை திரவிய பொருட்களாக் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புதுபட்டு வஸ்திரம் நந்தி ஈஸ்வரருக்கு சாத்தி வண்ணமிகு வாசனை மலரும், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனையும் செய்யப்பட்டது.  தெஷ்ணா மூர்த்தி பகவனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அன்றைய தினம் ஆலயம் நோக்கி ஆயிரகணக்கில் பக்தர்கள் வந்து இறையருள் பெற்று சென்றனர். ஆலயத்தில் அனைந்து முன் ஏற்பாடுகளை கோவில் குருக்கள் பாலு செய்து இருந்தார்.

The post கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் பிரதோஷம் appeared first on Dinakaran.

Related Stories: