மௌண்ட்சீயோன் சர்வதேச பள்ளியில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 2: மௌண்ட்சீயோன் சர்வதேசப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் 2023 மே மாதம் முழுவதும் நடைபெற்றது. அதில் மாணவ, மாணவிகளுக்கு மனக்கணிதம், மென்பொருள், கணிணி, வீடியோ எடிட்டிங், இசை, நடனம், ஓவியம், விளையாட்டு, குதிரையேற்றம், நீச்சல், ஆங்கில பேச்சு பயிற்சி என 25 வகையான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. முகாமின் நிறைவுநாளில் பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி முன்னிலையில் கலைநிகழ்சிகளுடன் கூடிய நிறைவு விழா நடைபெற்றது.

விழாவில் முகாமில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளியின் முதல்வர் பேசுகையில், கல்வியை தாண்டி திறமையை வளர்க்க மாணவர்கள் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியதாகும். இதை ஒவ்வொரு நாளும் கடைபிடிக்க வேண்டும். இதுபோன்ற வாய்ப்புகளை ஒருபோதும் நழுவவிடக் கூடாது. நவீன உலகில் கற்றுக் கொண்டு இருப்பதே நமது நோக்கமாக கொள்ள வேண்டும் என்றார். நிகழ்வின் இறுதியில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், அவர்களால் வடிவமைக்கப்பட்ட ஓவியங்களும் கண்காட்சியாக்கப்பட்டன. கலந்து கொண்ட பெற்றோர்களும், மற்றவர்களும் கண்டுமகிழ்ந்தனர். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர் சரண்குமார் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

The post மௌண்ட்சீயோன் சர்வதேச பள்ளியில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: