இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி அப்புறப்படுத்த கோவிலடி மக்கள் எதிர்பார்ப்பு

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 2: கோவிலடியில் 60 ஆண்டுகளை கடந்து நிற்கும் பழைமையான தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் திருவள்ளுவர் சிலைக்கும் பின்புறம் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி கட்டி சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இந்த தொட்டியிலிருந்து கோவிலடி பொதுமக்கள் குடிநீர் வசதி பெற்று வருகிறார்கள்.

இந்த தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியை கடந்த 2013-2014ம் ஆண்டு பழுதுபார்க்கும் பணிக்காக ரூ.51,000 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. மிகவும் பழைமைவாய்ந்த இந்த நீர் தேக்கத் தொட்டிக் கட்டிடத்தின் அனைத்து பகுதிகளும் இடிந்துவிழுந்து கொண்டு உள்ளது.இதை இடித்து அப்புறபடுத்த வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி இருக்கும் இடத்தின் அருகில் குடியிருப்புகளும் உள்ளது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் நிலையில் உள்ள இந்த தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டிக் கட்டிடத்தை இடித்து அப்புறபடுத்திவிட்டு மீண்டும் அதே இடத்தில் வேறு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி அப்புறப்படுத்த கோவிலடி மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: