பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனிதசங்கிலி

 

விருதுநகர், ஜூன் 2: விருதுநகரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். விருதுநகர் கச்சேரி ரோட்டில் ஸ்டேட் பேங்க் முன்பாக நடந்த போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் அலுவலர்கள் சங்க நிர்வாகி சம்பத்குமார் தலைமை வகித்தார். போராட்டத்தை கன்வீனர் குருசாமி துவக்கி வைத்தார். ஊதிய மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனம் உடனடியாக 4ஜி மற்றும் 5 ஜி சேவையை துவக்க வேண்டும். ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு கொள்கை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

The post பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனிதசங்கிலி appeared first on Dinakaran.

Related Stories: