எகிறி வரும் தக்காளி விலை

 

மதுரை, ஜூன் 2: தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.5 முதல் ரூ.10க்குள் விற்று வந்த தக்காளி, தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை தரத்திற்கேற்ப உயர்ந்திருக்கிறது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் நேற்றைய விலை விபரம் (ஒரு கிலோவிற்கானது): கத்தரி கிலோ ரூ.60, வெண்டைக்காய் ரூ.20, பாகற்காய் பெரியது ரூ.50, புடலை ரூ.30, மிளகாய் உருட்டு ரூ.60, மிளகாய் சம்பா ரூ.60, சீனி அவரைக்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.40, சுரைக்காய் ரூ.20, பீன்ஸ் ரூ.60. நைஸ் அவரை ரூ.80, பெல்ட் அவரை ரூ.70, மாங்காய் கல்லாமை ரூ.20, மாங்காய் நாடு ரூ.10, நெல்லி ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.70, சண்டா ஒட்டு ரூ.75, பல்லாரி ரூ.30.

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகி சின்னமாயன் கூறும்போது, ‘‘தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 15 கிலோ கொண்ட ஒரு பெட்டிக்கு தலா ரூ.100 என தினமும் அதிகரித்து வருகிறது. ஒரு மாதம் முன்பு ஒரு பெட்டி ரூ.120தான், சில்லறையில் கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டது வெயில், மழையால் பாதித்து, தற்போது தமிழ்நாட்டில் தக்காளி 75 சதவீதம் வரத்து குறைந்து விட்டது, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து வருகிறது, அது பெட்டி ரூ.250 முதல் ரூ.450 வரை விற்கிறது. பொடி தக்காளி சில்லறையில் கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. மாங்காய் வரத்து சரிந்து கல்லாமை கிலோ ரூ.20க்கும், நாடு உருண்டை ரூ.10ம் என குறைந்த விலைக்கு விற்கிறது’’ என்றார்.

The post எகிறி வரும் தக்காளி விலை appeared first on Dinakaran.

Related Stories: