முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டிய 4 பேர் கைது: மணிமங்கலம் அருகே பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: மணிமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை அருவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மணிமங்கலம் அருகே வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (25), முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் தீபக் (23). ஆகிய 2 பேருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம்தேதி அன்று தினேஷ், வரதராஜபுரம் – தாம்பரம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென அரிவாளால் தினேஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த தினேஷை, அக்கம் பக்கதினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த தீபக் மற்றும் அவரது கூட்டாளிகளான விக்கி (எ) விக்னேஷ், சரண், சந்துரு ஆகிய 4 பேரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தினேஷ், அவரது நண்பர்களான குணா, விக்கி ஆகியோர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தீபக்கை தாக்கியுள்ளனர். இதனால் கோபத்தில் இருந்த தீபக், அதற்கு பழிவாங்குவதற்காக தினேஷை அருவாளால் வெட்டியது தெரியவந்தது. மேலும் போலீசார், கைது செய்யப்பட்ட 4 பேரை நேற்று தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டிய 4 பேர் கைது: மணிமங்கலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: