கேமராவுடன் டிவிஎஸ் ஸ்கூட்டர், பைக்குகள்

சாலை பாதுகாப்பை பொறுத்தவரை, டூவீலர்களில் செல்வோருக்கான பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து அவ்வப்போது ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. டூவீலரில் செல்பவர்கள் பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், டிவிஎஸ் நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளில் கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளது. கார்களில் சீட் பெல்ட் ரிமைண்டர்களை போல இந்த கேமராக்கள், டூவீலர் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிகிறார்களா என்பதை கண்காணித்து, அணியாவிட்டால் பைக் அல்லது ஸ்கூட்டரின் டேஷ் போர்டில் எச்சரிக்கை செய்யும்.

இந்த புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த புதிய தொழில்நுட்பத்துடன் பைக் விரைவில் அறிமுகமாகும் எனவும், சமீபத்தில் ஆட்டோமொபைல் கருத்தரங்கு ஒன்றில் பேசிய டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு மேம்பாட்டு பிரிவின் தலைவர் வினய் ஹார்னே தெரிவித்துள்ளார்.

The post கேமராவுடன் டிவிஎஸ் ஸ்கூட்டர், பைக்குகள் appeared first on Dinakaran.

Related Stories: