மும்பை:ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 பைனலில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த இறுதிப்போட்டி தொடங்குகிறது. கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா ஆகிய உலகின் வலுவான 2 அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதால் போட்டி மிக கடுமையாக இருக்கும். இந்த போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை வெல்ல இந்திய அணி களமிறக்க வேண்டிய ஆடும் லெவனை மாஜி வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
அதன் விவரம்:- கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்கவேண்டும் என்று கூறியுள்ள அவர், அதன்பின்னர் புஜாரா, கோஹ்லி, ரகானே ஆகியோர் இறங்கவேண்டும் என்றும் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத்தை ஆட வைக்கவேண்டும். சுழற்பந்துவீச்சுக்கு அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஷமி, சிராஜ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர் பணியை செய்யவேண்டும் என்று கூறி உள்ளார்.
The post ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் இந்திய அணியில் யார், யார் ஆடவேண்டும்: கவாஸ்கர் தேர்வு appeared first on Dinakaran.