புதிய நாடாளுமன்ற சுவரோவியத்தால் சர்ச்சை: அண்டை நாடுகளின் பகுதிகளை சேர்த்து அகண்ட பாரதம் சித்தரிப்புக்கு நேபாள அரசியல் தலைவர்கள் கண்டனம்

டெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியத்தில் இடம் பெற்றுள்ள இந்திய வரைபடத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சுவரோவியத்தில் இடம் பெற்றுள்ள வரைபடத்தின் அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் பகுதிகளை சேர்த்து அகண்ட பாரதத்தை சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளது.

இதற்கு நேபாள அரசு தலைவர்கள் கட்டணத்தை தெரிவித்து இருப்பதோடு சர்ச்சைக்குரிய வரைபடத்தை அகற்றும் படி கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே 5 நாள் பயணமாக இந்தியா புறப்படுவதற்கு முன்பு ஆளுங்கட்சி எம்.பி.களுடன் நேபாள பிரதமர் புஷ்பகமல் பிரசாந்தா ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால் இந்திய பயணத்தில் சர்ச்சைக்குரிய வரைபட சுவரோவியத்தை அகற்ற வேண்டும் என இந்திய அரசிடம் அவர் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே கோரிக்கையை முன்னாள் பிரதமர் சர்மா ஒலியும் வலியுறுத்தியுள்ளார்.

 

The post புதிய நாடாளுமன்ற சுவரோவியத்தால் சர்ச்சை: அண்டை நாடுகளின் பகுதிகளை சேர்த்து அகண்ட பாரதம் சித்தரிப்புக்கு நேபாள அரசியல் தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: