தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை

தூத்துக்குடி, ஜூன் 1:தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்வதுதொடர்பாக, ரயில்வே அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை நடத்தினார்.
தென்னக ரயில்வே மூலம் மேலூர் ரயில் நிலையம் சுமார் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அருகே விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மேலூர் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மேலூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக நடைபாதை வசதி செய்து கொடுக்க வேண்டும். உழவர் சந்தை முன்பும், புதிய பேருந்து நிலையம் முன்பும் படிக்கட்டுக்கள் அமைத்திடவேண்டும். தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு இடத்தில் படிக்கட்டு அமைத்திடவேண்டும். மேலும் இரண்டு பிளாட்பாரங்களை இணைக்கும் வண்ணம் ரயில்வே நடை மேம்பாலம் அமைத்திடவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த, கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கேவிகேநகர் கிழமேல் சாலை மற்றும் தென்வடல் குறுக்கு சாலைகள் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் ரயில்வே துணை திட்ட பொது மேலாளர் சரவணன், மாநகர திமுக செயலர் ஆனந்தசேகரன் மற்றும் ரயில் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, அமைச்சர் கீதாஜீவன், ரயில்வே அதிகாரிகளுடன் சென்று தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் அதிகாரிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: