நூலக பயன்பாடு குறித்து பாளை மத்திய சிறையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

நெல்லை, ஜூன் 1: பாளை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு நூலக பயன்பாடு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி வழிகாட்டுதல்படி, நெல்லை மாவட்ட மைய நூலகம் சார்பில் பாளை மத்திய சிறையில் சிறை நூலகப் பயன்பாடு, வாசகர் வட்டம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் சிறை நூலகத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது ஆகியவை குறித்த கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத் தலைமை வகித்தார். இந்த கருத்தரங்கில் மாவட்ட மைய நூலகத்தின் முதுநிலை நூலகர் வயலட் மற்றும் மைய நூலக பணியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் கலந்து கொண்டனர். துணை சிறை அலுவலரும், நல அலுவலருமான முனியாண்டி நன்றி கூறினார்.

The post நூலக பயன்பாடு குறித்து பாளை மத்திய சிறையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: