பிஎம்டபிள்யூ இசட்4 ரோட்ஸ்டர்

பிஎம்டபிள்யூ இந்தியா, இசட்4 ரோட்ஸ்டர் என்ற காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஷோரூம் துவக்க விலையாக சுமார் ₹89.3 லட்சம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட தோற்றத்துடன் கூடிய இந்தக் காரில் முன்புறம் கிரில் புதிய வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. எல்இடி ஹெட்லாம்ப், முன்புற சக்கரங்களுக்கு அருகில் புதிய ஏர் வெண்ட்கள், எல் வடிவ எல்இடி டெயில் லைட்டுகள் என புதிய அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இதுதவிர, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 10.25 அங்குல முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 408 வாட்ஸ் ஹார்மன் – கார்டன் மியூசிக் சிஸ்டம் உள்ளன. இந்தக் காரில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 340 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. 4.5 நொடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டும்.

The post பிஎம்டபிள்யூ இசட்4 ரோட்ஸ்டர் appeared first on Dinakaran.

Related Stories: