கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த புதுகை எஸ்பி, ஏடிஎஸ்பிக்கு டிஜிபி நேரில் பாராட்டு

புதுக்கோட்டை, மே 31: கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த புதுக்கோட்டை எஸ்பி, ஏடிஎஸ்பியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் (54). இவரது தாயார் சிகப்பி (75). கடந்த 23.12.22 இவர்கள் வீட்டில் இருந்தபோது மர்மம் நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த நகைள் கொள்ளையடிக்பப்பட்டது. இதையடுத்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் 5 தனிப்படையில் அமைத்து கொலை வழக்கு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் 2.5.2023 அன்று தனிப்படை போலீசார் அலெக்ஸாண்டர் (36), சக்திவேல்(33)ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கையில், தாய்- மகனை அடித்து கொலை செய்து விட்டுக் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே, மற்றும் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் எஸ்ஐ டேவிட் மற்றும் போலீசார்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

The post கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த புதுகை எஸ்பி, ஏடிஎஸ்பிக்கு டிஜிபி நேரில் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: