பொது இடங்களில் போலீசார் எச்சரிக்கை

 

தேவதானப்பட்டி, மே 31: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் பொதுஇடங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி வளாகங்கள், கோவில் வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் மது பாட்டில்களை உடைத்தும் அந்த இடத்தை பயன்பாடற்ற இடமாக மாற்றுவதுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதால் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இதனால் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கின்றனர்.

இந்நிலையில் தேவதானப்பட்டி போலீசார் சில்வார்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் அருகே பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர். மேலும் இரவு நேர போலீசார் ரோந்து பணியை அதிகரித்துள்ளனர். இந்த எச்சரிக்கை பேனர் மற்றும் போலீசாரின் தொடர் ரோந்து பணியை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

The post பொது இடங்களில் போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: