தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு இன்று தேனி வருகிறது

 

தேனி, மே 31 தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக்குழுத் தலைவர் பண்ரூட்டி எம்எல்ஏ வேல்முருகன் தலைமையிலான எம்எல்ஏக்கள் குழு இன்று (மே 31) தேனி மாவட்டத்திற்கு வருகிறது.
இக்குழுமாவட்டத்தில் அரசுத்துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா மற்றும் பல்வேறுத் துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்ய உள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டமும் நடக்க உள்ளது.

இக்குழுவில், எம்எல்ஏக்கள் அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), அருள் (சேலம் மேற்கு), கருணாநிதி (பல்லாவரம்), சக்கரபாணி (வானூர்), பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), மணி (ஓமலூர்), ரூபி மனோகரன் (நாங்குனேரி), மோகன் (அண்ணா நகர்), ராமலிங்கம், (நாமக்கல்), வில்வநாதன் (ஆம்பூர்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு இன்று தேனி வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: