விருப்பாட்சி ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

 

ஒட்டன்சத்திரம், மே 31: ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சியில் புதிதாக துவங்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்களை ஜூன் 7ம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும். பதிவு கட்டணம் ரூ.50, பயிற்சி கட்டணம் ரூ.195 மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து பயிற்சி மையத்தில் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

இத்தொழிற்பிரிவுகளில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். அத்துடன் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, பாடப்புத்தகங்கள், காலணிகள் வழங்கப்படும். மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி மையம், விருப்பாட்சி வாய்க்கால் பாலம், ஒட்டன்சத்திரம் என்ற முகவரியில் நேரில் அணுகுமாறு தொழிற்பயிற்சி நிலைய கல்லூரியின் முதல்வர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

The post விருப்பாட்சி ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: