வெயில் தாக்கம் எதிரொலி: புதுச்சேரியில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு.. கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.. மாணவர்கள் குஷி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் தற்போது தங்களின் கோடை விடுமுறையை முடித்து மீண்டும் பள்ளிகளுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சில மாநிலங்களில் கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட பள்ளிகள் திறப்பு ஜூன் 7 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே ஜூன் 1ம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதால் பாடப்புத்தகம் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.

 

 

The post வெயில் தாக்கம் எதிரொலி: புதுச்சேரியில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு.. கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.. மாணவர்கள் குஷி..!! appeared first on Dinakaran.

Related Stories: