மிரட்டல் விடுத்தோர் மீது நடவடிக்கை கோரி மனு

 

விருதுநகர், மே 30: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்குரத வீதியை சேர்ந்த மகாலட்சுமி(38) என்பவர் நேற்று மனு அளித்தார். மனுவில், எனது கணவர் கூடலிங்கம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வருகிறார். மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூளிப்பட்டி அரண்மனை அருகில் உள்ள கோவிலுக்கு சொந்தமான கடையில் கணவரின் பெயரில் ரூ.15 லட்சம் கடன் வாங்கி, துணிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். கடை அபுசிக்கந்தர் பெயரில் உள்ளது. கடைக்கு ரூ.1 லட்சம் முன்தொகை கொடுத்து, மாதம் ரூ.14 ஆயிரம் வாடகை கொடுத்து நடத்தி வருகிறேன். கடந்த மார்ச் 5ல் கடைக்கு வந்த அபுசிக்கந்தர் மற்றும் 3 பேர் கடையில் இருந்த பணியாளர்களை வெளியேற்றி பூட்டிவிட்டனர்.

கடையை தரமுடியாது, கடைக்குள் உள்ள ஜவுளிகளையும் தரமுடியாது, மீறி கேட்டால் கொன்று விடுவோம் என மிரட்டி சென்றுவிட்டனர். கடைக்குள் ரூ.8 லட்சம் மதிப்பிலான துணிகள் உள்ளன. போலீசில் அளித்த புகாரில் 6 மாதத்திற்கு தொந்தரவு செய்யக்கூடாது என பேசி சாவியை பெற்று கொடுத்தனர். இந்நிலையில் கடந்த மே 15ல் ஜவுளி கடை பூட்டை உடைத்து சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, ஜவுளிகளை சேதம் செய்துள்ளனர். போலீசில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கவில்லை. குழந்தைகளுடன் வாங்கிய கடனை கட்ட முடியாமல் சிரமத்தில் உள்ளேன். ஜவுளி கடையை மீட்டு, அபுசிக்கந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post மிரட்டல் விடுத்தோர் மீது நடவடிக்கை கோரி மனு appeared first on Dinakaran.

Related Stories: