ராஜபாளையம், மே 30: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். இன்பம் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் முத்து வெள்ளையப்பன் உரையாற்றினார். மேலும் இதில் அனைத்து துறை ஓய்வு சங்கத்தைச் சார்ந்த ராஜ்குமார், அரசு ஊழியர்கள் சங்க வட்டக் கிளை செயலாளர் கருமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
The post ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம் appeared first on Dinakaran.