கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து

 

தேனி , மே 30: தேனி பகுதியில் திடீரென பெய்த மழையால் ஆங்காங்கே விவசாய பணிகள் துவங்கி உள்ளது. இதனால் நெல், மக்காச்சோளம், சோளம் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் தனியார் மற்றும் கூட்டுறவு சங்க விற்பனை அங்காடிகளில் குவிந்துள்ளனர். தேனி வட்டாரத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உரம் முழுவதும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு நிர்ணயித்த விலைக்கு கூடுதலாக உரம் மேற்கொள்ளும் தனியார் உரக்கடைகள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985ன்படி உரிமம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், உர உரிமம் மற்றும் பூச்சி மருந்து உரிமங்கள் உரிய முறையில் பெற்றிருக்க வேண்டும். காலாவதியான பூச்சி மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது. காலாவதியான பூச்சி மருந்தில் புதிய லேபில் ஒட்டி விற்பனை செய்யக்கூடாது. போலியான பூச்சிமருந்து விற்பனை செய்யக்கூடாது. அரசினால் தடை செய்யப்பட்ட கலப்பு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உரிய இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டுமென மாவட்ட தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: