உச்சிப்புளி அருகே கார்கள் மோதலில் 11 பேர் படுகாயம்

மண்டபம், மே 30: உச்சிப்புளி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த நான்கு பேர் கேரளா, தமிழகம் உள்பட தென் மாநிலங்களுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள், கேரளாவில் இருந்து காரை வாடகைக்கு எடுத்து ராமேஸ்வரம் வந்தனர். இங்கு தனுஷ்கோடி,பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு, நேற்று மாலை கேரளா திரும்பினார். உச்சிப்புளி அருகே குப்பானிவலசை பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பழநி புது ஆய்குடி இருந்து ராமேஸ்வரம் சென்ற கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் புது ஆய்குடியை சேர்ந்த ஒரு பெண், ஒரு வாலிபர் உள்பட 7 பேர், கேரள காரில் வந்த 4 பேர் என 11 பேர் காயமடைந்தனர். உச்சிப்புளி போலீசார், விபத்தில் சிக்கியவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து கார் டிரைவர்கள் புது ஆய்குடியைச் சேர்ந்த முத்து, குமுளியைச் சேர்ந்த சதீஷ் ஆகியோரிடம் உச்சிப்புளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post உச்சிப்புளி அருகே கார்கள் மோதலில் 11 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: