டூவீலர் மோதி மீனவர் பலி

 

மண்டபம், மே 30: மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்ற மீனவர் டூவீலர் மோதி இறந்தார். மண்டபம் அருகே வேதாளை நடுமனைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி(46). இவருக்கு மனைவி, ஒரு மகன், 2 மகள் உள்ளனர். மீனவரான இவர், பாம்பன் கடலில் நாட்டுப்படகில் சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, இவர் சுந்தரமுடையான் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற டூவீலர் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கந்தசாமியை ஆம்புலன்ஸ் மூலம் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக, ராமேஸ்வரம் சல்லிமலையைச் சேர்ந்த மனோஜ் இர்வினிடம்(32) மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் மோதி மீனவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: