கனடாவில் உள்ள மகளிடம் பேசிவிட்டு சினிமா மேக்கப் கலைஞர் சத்யபிரியா தற்கொலை: போலீஸ் தொடர் விசாரணை

சென்னை: கனடாவில் பணியாற்றி வரும் தனது மகளிடம் வீடியோ காலில் பேசியபோது, ‘தனக்கு வாழ பிடிக்கவில்லை’ என்று கூறிவிட்டு சினிமா மேக்கப் கலைஞர் சத்யபிரியா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை வடபழனி குமரன் காலனி 9வது தெருவை சேர்ந்தவர் சத்யபிரியா(40). இவர் சினிமா மேக்கப் கலைஞர். இவருக்கு, கணவர் கவுரிசங்கர் மற்றும் யோகிதா(22) என்ற மகள் உள்ளனர். சத்ய பிரியாவுக்கு மதுபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். தற்போது தனது தாயுடன் தனியாக வாடகை வீட்டில் சத்யபிரியா வசித்து வந்தார். மகள் கனடாவில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தினமும் கனடாவில் உள்ள மகளுக்கு போன் செய்து சத்யபிரியா பேசுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு சத்யபிரியா தனது மகள் யோகிதாவிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை… உன்னை விட்டு செல்கிறேன்’ என்று கூறி இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த யோகிதா உடனே அருகில் உள்ள அத்தை பிரியதர்ஷினிக்கு போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறியுள்ளார்.

உடனே அங்கே வந்த பிரியதர்ஷினி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள அறையில் சத்யா பிரியா புடவையால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே மகள் யோகிதாவுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவம் குறித்து வடபழனி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் சத்யபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post கனடாவில் உள்ள மகளிடம் பேசிவிட்டு சினிமா மேக்கப் கலைஞர் சத்யபிரியா தற்கொலை: போலீஸ் தொடர் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: