ராணுவம் மீது தாக்குதல் இம்ரான்கான் மன்னிப்பு கேட்டால் பேச்சுவார்த்தை: பாக். நிதியமைச்சர் சூசகம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசிடம் மன்னிப்பு கேட்டால் பேச்சுவார்த்தை நடப்பதற்கு சாத்தியம் இருப்பதாக அந்நாட்டின் நிதியமைச்சர் இஷாக் டார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது திடீரென கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டது. இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு தடை விதிப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகின்றது.

இந்நிலையில் பொதுத்தேர்தல் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னாள் பிரதமர் இம்ரான் 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாப் டார் கூறுகையில்,‘‘மே 9ம் தேதி ராணுவ நிலைகள் தாக்கப்பட்ட வன்முறை சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினால் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது” என்றார். முன்னதாக இம்ரான் கானின் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை அரசு நிராகரித்தது.

The post ராணுவம் மீது தாக்குதல் இம்ரான்கான் மன்னிப்பு கேட்டால் பேச்சுவார்த்தை: பாக். நிதியமைச்சர் சூசகம் appeared first on Dinakaran.

Related Stories: