நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது: அண்ணாமலை பேச்சு

சென்னை: ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்வது குறித்து சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; ஏழைகளுக்கு மூன்றரை கோடி வீடுகளை பிரதமரின் திட்டம் மூலம் கட்டிக்கொடுத்துள்ளோம். நாடு முழுவதும் 9 ஆண்டுகளில் 11 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 9.60 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு விறகு அடுப்பு சமையலால் வரும் நோய்களில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. கொரோனாவை சரியான முறையில் கையாண்ட ஒரே நாடு இந்தியா தான். பிரதமர் மோடி சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.

The post நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது: அண்ணாமலை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: