புதுக்கோட்டையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியபோது புளூடூத், பட்டன் கேமராவுடன் மாணவர் பிடிபட்டார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில், புளூடூத் மற்றும் பட்டன் கேமராவுடன் தேர்வெழுதியவர் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை அரசு கலைஞர் கருணாநிதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 666 பேர் தேர்வெழுதினர். அப்போது 3ம் எண் அறையில் தேர்வு எழுதி கொண்டிருந்த தர்மன் (20) என்பவரின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி, அவரை சோதனையிட்டார். அப்போது, தர்மனிடம் பட்டன் கேமரா, புளூடூத் கருவி இருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக முதன்மை கண்காணிப்பாளர் மகேஸ்வரி, புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தர்மன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஈரோடு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ 3ம் ஆண்டு படித்து வந்ததும், இவருக்கு விடைகளை சொல்லி கொடுத்து உதவியது ஈரோட்டை சேர்ந்த பரணிதரன் (20) என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தர்மனை கைது செய்தனர்.

The post புதுக்கோட்டையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியபோது புளூடூத், பட்டன் கேமராவுடன் மாணவர் பிடிபட்டார் appeared first on Dinakaran.

Related Stories: