புதுச்சேரி பெண் நடன கலைஞர் பலாத்காரம்: கன்னியாகுமரி இன்ஜினியர் கைது

 

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செங்கோடு புல்லன்விளையை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் அபிஷ் (30). இன்ஜினியர். துபாயில் வேலை செய்து வந்தார். தற்போது சொந்த ஊரில் இருந்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி மனைவி 5 மாத கர்ப்பமாக உள்ளார். அபிசுக்கும், பாண்டிச்சேரியை சேர்ந்த 24 வயதான பெண் நடன கலைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அபிஷ் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பழகி வந்தார். ஒரு கட்டத்தில் 2 பேரும் காதலிக்க தொடங்கினர். அப்போது அபிஷ் நடனகலைஞரிடம் திருமண செய்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதையடுத்து, அபிஷ் கடந்த சில மாதங்களாக நடன கலைஞரை குமரி மாவட்டத்திற்கு வரவழைத்து மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு உள்பட பல சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து உள்ளார். இதில் அவர் 4 மாத கர்ப்பமானார். தொடர்ந்து, நடன கலைஞருக்கு அபிசுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அபிஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அபிஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: