வேதாரண்யம், மே 27: வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஷ்வர சுவாமி கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ள வள்ளி தெய்வனை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணிய சுவாமி ஒரு முகம், ஆறு திருக்கரங்களுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது.
இதில் யாழ்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, வேதாரண்யம் கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன், கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவா் தமிழ்மணி உட்பட உள்ளுர் பிரமுகர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 2-ம்தேதி அன்று நடைபெறவுள்ளது. 3-ம்தேதி வைகாசி விசாக பெருவிழா நடைபெறும். இதில் ஏராளமான பக்தா்கள் பால்குடம், பன்னீர், சந்தன காவடிகள் எடுத்து வந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யபடும் என்று கோயில் நிர்வாக அதிகாரி அறிவழகன் தெரிவித்தார்.
The post கோடியக்காடு குழகர் கோயிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.