கீரையை தாக்கும் இலைப்புழுவை எப்படி கட்டுப்படுத்துவது

மன்னார்குடி, மே 27: திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய வட்டாரங் களில் கீரை பயிரானது பரவலாக பயி ரிடப்பட்டு வருகிறது. நம் உண்ணும் உணவில் தினமும் சேர்த்துக் கொள் ளப் பட வேண்டிய ஒரு முக்கியமான காய்கறி பயிர் கீரையாகும். இதில், இரும் புச் சத்து மிகுதியாக இருப்பத னால் கண் பார்வை மற்றும் எலும்புகள் வலு பெறும். கீரையில் தண்டு கீரை, முளைக்கீரை, சிறுகீரை என பல வகையான கீரை கள் நம் சாகுபடி செய்து வருகிறோம். அவ்வாறு சாகுபடி செய்யப்படும் கீரைகள் குறைந்தது 20 லிருந்து 30 நாட்களுக்குள் பறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விதை விதைத்தலிருந்து 30 நாட்கள் பல்வகையான நோய்கள் மற்றும் பூச்சிகள் கீரைகள் சாகுபடி செய்வதில் பாதிப்புகளையும் விற்பனையில் தர குறைவுகளும் ஏற்படுகின்றன.

இதில், முக்கிய பங்கு வகிக்கும் பூச்சி இலை புழுவாகும். இந்த நிலையில் கீரை பயிர்களை தாக்கும் இலைப்புழுக்களை கட்டுப்படு த்துவது எப்படி? என்பது குறித்து தோட்டக் கலை உதவி இயக்குனர் இளவர சன் கூறியது, ஹைமீனியா ரிக்கர்வாலிஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இப்புழுவானது இலைகளைப் பினைத்து அதற்குள் வாழும் பண்புடையது. மேலும் இலை பச்சியத்தை சுரண்டி தின்பதால் இலை வாடி விடுகிறது இதனால் விவசாயிகள் விற்கும் விற்பனை தரத்தை குறைக்கிறது.

பூச்சியை கண்டறிதல் : பச்சை நிற புழுவானது வெண்ணிற கோடுகளும் கருப்பு பிறைவங்களும் மார்பு பகுதியில் காணப்படும். பிறகு பூச்சியாக வளர்ச்சி அடைந்ததும் கரும்பலுப்பு நிறத்தில் அலை அலையாய் வெண் கோடுகளுடன் காணப்படுகின்றன.கட்டுப்படுத்தும் வழிமுறை: தாக்கப்பட்ட செடிகளின் புழுக்கள் பறித்து அளித்தல் நல்லது. ஹெக்டரருகு ஒரு விளக்கு பொறி பராமரிப்பதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். கீரை விதை விதைத்த 10 மற்றும்15 நாட் களில் ஆசாடிரக்டின் 5 மிலி ஒரு லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து தெளித்தல் மூலம் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் தெரிவித்தார்.

The post கீரையை தாக்கும் இலைப்புழுவை எப்படி கட்டுப்படுத்துவது appeared first on Dinakaran.

Related Stories: