அரசு ஊழியர் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சாவூர், மே 27: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தஞ்சாவூரில் மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். வருவாய் கிராம உதவியாளர் சங்கத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் சாந்தி கண்டன உரையாற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிபிஎஸ்-ஐ ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு அமல்படுத்திய அதே தேதியில் அமல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் உத்தரவுப்படி போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த வருவாய் கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பணியாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மண்டல அளவில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post அரசு ஊழியர் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: