சாத்தூர் தொகுதியில் புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை

ஏழாயிரம்பண்ணை, மே 27: சாத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கண்டியாபுரம், கே.லட்சுமிபுரம் பகுதியில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கும் மற்றும் முத்துச்சாமிபுரம், கங்கர் சேவல் கிராமங்களில் ரூ.9 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை, மற்றும் பாறைபட்டியில் ரூ.4 லட்சம் செலவில் வாறுகால் வசதி உள்ளிட்ட ரூ.38 லட்சம் மதிப்பிலான பணிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார்.இந்த நிகழ்வில் மதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்ட துணை செயலாளர் இராஜேந்திரன், முத்துச்சாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சாத்தூர் தொகுதியில் புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: