கழிவு நீர் தொட்டிகளை பாதுகாப்பாக சுத்தம் செய்ய ஆலோசனை கூட்டம்

சாத்தூர், மே 27: சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கழிவுநீர் தொட்டிகளை நவீன இயந்திரங்களை வைத்து உரிய பாதுகாப்பு முறையில் உரிமம் பெற்ற வாகனங்கள் மூலமாக அகற்ற வேண்டும். உரிமம் பெறாத கழிவு எடுக்கும் வாகனத்தை நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து நீதி மன்றத்தில் ஒப்படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி பொறியியல், சுகாதார பிரிவினர் மற்றும் தனியார் கழிவுநீர் நச்சு தொட்டி தொழில் செய்யும் வாகன உரிமையாளர்கள் சேகர், இசக்கி, கண்ணன்பெருமாள், முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கழிவு நீர் தொட்டிகளை பாதுகாப்பாக சுத்தம் செய்ய ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: