உத்திரமேரூரில் ஜமாபந்தி நிறைவு நாளில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உத்திரமேரூர், மே 27: உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி, கடந்த 16ம் தேதியன்று துவங்கி நேற்று வரை 8 நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் கனிமொழி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன், பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் வட்டாட்சியர் லோகநாதன் வரவேற்றார். ஜமாபந்தி துவக்கிய நாள் முதல் 8 நாட்களில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம மக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, ரேஷன் கார்டு, புதிய பட்டா, பட்டா மாற்றம், இயற்கை மரணம் ஈமச்சடங்கு, உதவிக்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1,125 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. அதில், 269 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட 269 பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

The post உத்திரமேரூரில் ஜமாபந்தி நிறைவு நாளில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: