மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் அரையிறுதியில் பிரணாய், சிந்து: வெளியேறினார் ஸ்ரீகாந்த்

கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கும் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு நேற்று காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்(30வயது, 9வது ரேங்க்), ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோ(28வயது, 13வது ரேங்க்) ஆகியோர் மோதினர். இருவரும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதற்கேற்ப பிரணாய் முதல் செட்டை 25-23 என்ற புள்ளிக் கணக்கிலும், 2வது செட்டை கென்டா 21-18 என்ற புள்ளிக் கணக்கிலும் போராடி கைப்பற்றினர். ெவற்றி யாருக்கு என்பதை முடிவுச் செய்யும் 3வது செட்டில் கூடுதல் வேகம் காட்டிய பிரணாய் அதனை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் வசப்பத்தினார்.

அதனால் ஒரு மணி 31 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் பிரணாய் 2-1 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். அதேபோல் மற்றொரு ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்(30வயது, 23வது ரேங்க்), இந்தோனேசிய வீரர் கிறிஸ்டியன் ஆதிநாதா(21வயது, 57வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் 57நிமிடங்களில் 16-21, 21-16, 21-11 என்ற செட்களில் கிறிஸ்டியன் வெற்றிப் பெற்றார். மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து(27வயது, 13வது ரேங்க்), சீன வீராங்கனை யீ மன் சாங்(26வயது, 18வது ரேங்க்) ஆகியோர் விளையாடினர்.

அதில் சிந்து ஒரு மணி 14நிமிடங்களில் 21-16, 13-21, 22-20 என்ற செட்களில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்குகள் நுழைந்தார். சிந்து இன்று நடைபெறும் அரையிறுதியில் இந்தோனேசிய வீராங்கனை கிரிகோரியா மரிஷிகா(23வயது, 9வது ரேங்க்)வை எதிர்கொள்கிறார். பிரணாய் இன்று நடக்க உள்ள அரையிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்தை வீழ்த்திய இந்தோனேசிய வீரர் கிறிஸ்டியன் ஆதிநாதா உடன் மோத இருக்கிறார்.

The post மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் அரையிறுதியில் பிரணாய், சிந்து: வெளியேறினார் ஸ்ரீகாந்த் appeared first on Dinakaran.

Related Stories: