பணி: சப்-இன்ஸ்பெக்டர்கள். மொத்த இடங்கள்: 621.
நிலைய அலுவலர் மொத்த இடங்கள் 129
காலியிடங்கள் விவரம்:
1. Sub-Inspector of Police (Taluk)-366 இடங்கள் (ஆண்கள்-257, பெண்கள்/திருநங்கைகள்-109).
2. Sub-Inspector of Police(Armed Reserve)- 145 இடங்கள் ( ஆண்கள்-102, பெண்கள்/திருநங்கைகள்-43).
3. Sub-Inspector of Police (TSP)_ 110 இடங்கள்.
4. Station Officer Tamil Nadu Fire Subordinate Service – 129 இடங்கள் (ஆண்கள் -90, பெண்கள் 38/திருநங்கைகள் 1)
சம்பளம்: ரூ.36,900- 1,16,600.
வயது: 1.7.2023 தேதியின்படி 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். முறையான கல்வித் திட்டத்தின் கீழ் பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். என்எஸ்எஸ், என்சிசி பயிற்சி பெற்றவர்கள் சிறப்பு தகுதி மதிப்பெண்கள் வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வில் பொது அறிவு, உளவியல் மற்றும் விண்ணப்பதாரரின் தமிழ் மொழியறிவு ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
உடற்தகுதி: குறைந்த பட்ச உயரம்: ஆ்ணகள்- 170 செ.மீ, (எஸ்சி/எஸ்டி/அருந்ததியர் ஆகியோருக்கு- 167 செ.மீ). மார்பளவு: சாதாரண நிலையில் 81 செ.மீயும், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ.யும் இருக்க வேண்டும்.
பெண்கள்/ திருநங்கைகள்: குறைந்த பட்ச உயரம் 159 செ.மீ., இருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி/அருந்திய பெண்கள் 157 செ.மீ., இருக்க வேண்டும்).
உடற்தகுதி திறன் தேர்வு: ஆண்கள்- 1.7 நிமிடத்தில் 1500 மீட்டர் தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். 2.5 மீட்டர் கயிறு ஏறுதல், 3.80 மீட்டர் நீளம் தாண்டுதல், 5 மீட்டர் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
பெண்கள்: 400 மீட்டர் தூரத்தை 2.30 நிமிடங்களில் ஓடி முடித்தல், 3 மீட்டர் நீளம் தாண்டுதல், 4.25 மீட்டர் குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்தத் தேர்வுகள் அனைத்தும் நடைபெறும் தேதி, இடம் போன்ற விவரங்கள் இ.மெயில் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வு 2023 ஆகஸ்டில் நடைபெறும். கட்டணம்: ₹500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.6.2023.
The post தமிழ்நாடு காவல், தீயணைப்பு துறையில் 750 பணியிடங்கள் appeared first on Dinakaran.