தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நெல்லை, தஞ்சை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, மதுரை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும். தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

விருத்தாசலத்தில் மிதமான மழை:

விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கருவேப்பலிங்குறிச்சி, பரவளூர், அரசகுழி உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

காட்டுமன்னார்கோயிலில் கனமழை:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்கிறது. திருமூலஸ்தானம், எடையார், வவ்வா தோப்பு, திருநாரையூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

ஆற்காட்டில் மழையால் மின் தடை:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

பூண்டி சுற்றுவட்டார ஊர்களில் மழை:

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, திருப்பாக்கம், மேட்டுப்பாளையம், ராமஞ்சேரி, நம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நெல்லை, தஞ்சை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: