எளிய சோதனைகள் மூலம் அறிவியல் அறிவை வளர்த்து கொள்ளுங்கள்-ஆயிரமாயிரம் திருவிழாவில் மாணவர்களுக்கு வேண்டுகோள்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவை ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார் தொடங்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ராணி முன்னிலை வகித்தார். தன்னார்வலர் வீரம்மாள் அனைவரையும் வரவேற்றார்.

ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவை பார்வையிட்ட இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது:

மாணவர்கள் கோடைகாலத்தில் உள்ள விடுமுறை நாட்களில் உங்கள் ஊரில் உள்ள நூலகங்களுக்கு சென்று புத்தகங்களை வாசிக்க வேண்டும், ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய அறிவியல் சோதனைகள் மூலம் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அதற்கான வாய்ப்புகளை இல்லம் தேடிக் கல்வி மையம் கோடை காலத்தில் வழங்கிறது என்றும், மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கே தன்னார்வலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,இல்லம் தேடி கல்வி செயலியில் எல்கேஜி, யுகேஜி 9ம் வகுப்பு புதிய சேர்க்கும் மாணவர்கள் விபரங்களைபதிவேற்ற வேண்டும் என்றார்.

இல்லம் தேடி கல்வி மையத்தில் நடைபெறும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தெய்வீக செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, கணித புதிர்கள், ஓரிகாமி மூலம் தொப்பி செய்தல், படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை மாணவர்களுக்கு செய்து காண்பித்திருந்தனர்.

மாணவ-மாணவிகள் உற்சாக காகித மடி கலை மூலம் தொப்பி செய்து மகிழ்ந்தனர்.குழந்தைகளுக்கு ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதாக பெற்றோர்கள் பாராட்டினர்.இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் வைஷ்ணவி, புவனேஸ்வரி, மகேஸ்வரி, சங்கீதா,வேம்பரசி கிருத்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post எளிய சோதனைகள் மூலம் அறிவியல் அறிவை வளர்த்து கொள்ளுங்கள்-ஆயிரமாயிரம் திருவிழாவில் மாணவர்களுக்கு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: