மறைமலைநகரில் கல்லூரி மாணவர்களை தாக்கி பணம் பறிப்பு: 2 பேர் கைது

செங்கல்பட்டு, மே 26: மறைமலைநகரில், கல்லூரி மாணவர்களை தாக்கி, பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவர்களை தாக்கியதேடு கொலை செய்துவிடுவதாக மிரட்டி அவர்களிடமிருந்து ₹20ஆயிரத்தை பறித்து சென்றதாக மறைமலைநகர் காவல் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. அதன் அடிப்படையில், மறைமலைநகர் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் தலைமை காவலர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு இருந்த 2 பேரை மடக்கி, பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள்
பொத்தேரி அருகே உள்ள கல்லூரியில் பிபிஏ, பிஎஸ்ஸி முதலாம் ஆண்டு படித்து வரும் சென்னை சோழிங்கநல்லூர் பகுதி காரப்பாக்கத்தை சேர்ந்த கிரிஸ்டோபர் டேவிட் என்பவரது மகன் டேவிட் (18). ஆவடி கோயில்பதாகை பகுதியை சேர்ந்த பரசுராம் என்பவரது மகன் விஷால் (18) என்பதும், இவர்கள் பிரபல கஞ்சா வியாபாரி பூச்சி என்பவரது தொடர்பில் இருந்து கொண்டு, அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்து, அவர்கள் கஞ்சாவை உபயோகப்படுத்தும் போது வீடியோவாக எடுத்து அதை சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் காண்பித்து நீ கஞ்சா உபயோகிக்கும் வீடியோ எங்களிடம் உள்ளது. இதை உன் பெற்றோரிடம் காண்பிப்பேன் கல்லூரி நிர்வாகத்திடம் காண்பிப்பேன் என அவர்களிடம் தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், இருவரிடமிருந்து ₹17ஆயிரத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மறைமலைநகரில் கல்லூரி மாணவர்களை தாக்கி பணம் பறிப்பு: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: