விளையாட்டு அரங்கில் முறிந்த மரக்கிளைகள்

நெல்லை, மே 25: நெல்லையில் கடந்த 22ம் தேதி பிற்பகல் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள், மரக்கிளைகள் சரிந்து விழுந்தன. அத்துடன் பாளை வஉசி மைதானம் புதிய கேலரியின் 2 மேற்கூரைகள் சரிந்து விழுந்தன.இதன் சுவடு மறைவதற்குள் பாளை அண்ணா விளையாட்டு அரங்கம் பிரதான உள் நுழைவு பகுதியில் உள்ள ஒரு மரத்தின் 2 பெரிய கிளைகள் உடைந்து முறிந்தநிலையில் உள்ளன. இவற்றை முழுவதுமாக அகற்றவேண்டும் என இங்கு வருபவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து விளையாட்டு அரங்க வட்டாரத்தினர் கூறுகையில் ‘‘முறிந்த மரக்கிளைகளை அகற்றி தருமாறு தீயணைப்பு படையினருக்கு கடிதம் தரப்பட்டுள்ளது. விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

The post விளையாட்டு அரங்கில் முறிந்த மரக்கிளைகள் appeared first on Dinakaran.

Related Stories: