சிங்கபெருமாள்கோவில் ரயில்வே கேட் மூடும்போது பல கிலோ மீட்டர் தூரத்திற்கு காத்து கிடக்கும் வாகனங்கள்: மேம்பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு, மே 24: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் – திருக்கச்சூர் சாலை இடையே ரயில்வே கேட், ரயில்கள் வரும்போது மூடப்பட்டால், பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் காத்து கிடக்கின்றன. இதனால், மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடந்த சில மாதங்களாக மேம்பாலம் கட்டும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சிங்கபெருமாள் கோவிலை கடந்து தான் தொழிற்சாலைககள் அதிகம் உள்ள ஒரகடம், பெரும்புதூர் செல்ல வேண்டும். இதனால், இந்த சாலையில் கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் அதிகம் செல்கின்றன.

சிங்கபெருமாள்கோவில் ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கனரக வாகனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைக்கு செல்லும் வேன் மற்றும் பேருந்துகள் ஆகிய வாகனங்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கின்றது. இதனால், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் தினமும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர், ஆப்பூர், கொளத்தூர் என 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த ரயில்வே கேட் கடந்து தான் தினமும் பயணித்து வருகின்றனர். எனவே, ரயில்வே கேட் மூடும்போதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போதும் நெரிசாலை குறைக்க சிங்கபெருமாள் கோவில் பகுதியில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சிங்கபெருமாள்கோவில் ரயில்வே கேட் மூடும்போது பல கிலோ மீட்டர் தூரத்திற்கு காத்து கிடக்கும் வாகனங்கள்: மேம்பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: